இதயம் பற்றிய செய்தி
உங்கனைவருக்கும் தெரியும் இதய நோயானது, முன்பைவிட இப்பொழுது பொதுவான ஓன்றாக ஆகிவிட்டது. நோய்கிருமிகள் தாக்கி ஏதாவது ஒரு உறுப்பு சிதைந்து, இறப்பு வருகிறது. அடிக்கடி முதலில் செயலிழக்கும் உறுப்பு இதயம் தான். உங்கள் இதயம் வலுவடைந்து நீண்டநாள் வாழ வழிகாட்டும் சில பொதுவான குறிப்புகள்:
- உடலில் எந்த ஓரு உறுப்பின் இயக்கத்திற்கும் நல்ல உணவு தேவை.
இயேசு, ‘நானே ஜீவ அப்பம்ளூ இந்த அப்பத்தைப் புசிப்பவன் பிழைப்பான்’ என்றார்.(யோவான் 6:51)
- உடல் பருமன் இதயத்துக்கு நல்லதல்ல.
உங்கள் இருதயங்கள் பெருந்திண்டியினாலும், வெறியினாலும் லவுகீக கவலைகளினாலும் பாரமடையாதபடிக்கு’ (லூக் 21:34)
- உணவில் மிதமிஞ்சிய கொழுப்பு, இதய வால்வுகளை அடைக்கிறது.
இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களாகில் உங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தாதிருங்கள் என்று வெகுகாலத்திற்குப்பின்பு தாவீதின் சங்கீதத்திலே சொல்லியிருக்கிறபடி… (எபிரெயர் 4:7)
- பதற்றம் இதய நோயிற்கு வழிவகுக்கும்.
இதயப்பூர்வமான உண்மைகள்
கர்த்தராகிய நானே ஒவ்வொருவனுக்கும், அவனவன் வழிகளுக்கும் செய்கைகளின் பலன்களுக்கும் தக்கதைக் கொடுக்கும்படிக்கு, இருதயத்தை ஆராய்கிறவரும் உள்ளிந்திரியங்களைச் சோதித்தறிகிறவருமாயிருக்கிறேன் (எரேமியா 17:10) எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள், அதினிடத்தினின்று ஜீவஊற்று புறப்படும். (நீதி மொழிகள் 4:23) கர்த்தர் எல்லா இருதயங்களையும் ஆராய்ந்து, நினைவுகளின் தோற்றங்களையெல்லாம் அறிகிறார்;; (1நாளா 28:09) இயேசு அவர்கள் நினைவுகளை அறிந்து: ‘நீங்கள் உங்கள் இருதயங்களில் பொல்லாதவைகளைச் சிந்திக்கிறதென்ன?’ என்று கேட்டார் (மத் 9:4) அவர்களும், அவர்கள் பிள்ளைகளும் என்றென்றைக்கும் நன்றாயிருக்கும்படி, அவர்கள் எந்நாளும் எனக்குப் பயந்து, என் கற்பனைகளையெல்லாம் கைக்கொள்வதற்கேற்ற இருதயம் அவர்களுக்கு இருந்தால் நலமாயிருக்கும்..(உபா 5: 29)
குணம்:கர்த்தர் உங்களுக்குப் புதிய இருதயத்தைத் தருவார்
உங்களுக்கு நவமான இருதயத்தைக் கொடுத்து, உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியைக் கட்டளையிட்டு, கல்லான இருதயத்தை உங்கள் மாமிசத்திலிருந்து எடுத்துப்போட்டு, சதையான இருதயத்தை உங்களுக்குக் கொடுப்பேன்(எசேக்கியல் 36:26) கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய். நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைபண்ணப்படும். (ரோமர் 10:09,10) துர்மனச்சாட்சி நீங்கத் தெளிக்கப்பட்ட இருதயமுள்ளவர்களாயும், சுத்த ஜலத்தால் கழுவப்பட்ட சரீரமுள்ளவர்களாயும், உண்மையுள்ள இருதயத்தோடும் விசுவாசத்தின் பூரண நிச்சயத்தோடும் சேரக்கடவோம்.(எபிரெயர் 10:22)
உங்கள் இருதயம் கலங்காதிருப்பாயாக. கர்த்தர் மீது விசுவாசமாயிருங்கள்.
You can find equivalent English tract @