jesus-loves-you123

 

இயேசு நேசிக்கிறார் உதவிசெய்கிறார்

பரிசுத்த வேதாகமத்திலிருந்து எடுத்தியம்பப்பட்டுள்ள பின்வரும் வசனங்கள் கர்த்தராகிய இயேசு உண்மையாகவே நம்மை நேசிக்கிறார் நமக்கு உதவிசெய்கிறார் என்பதை நிரூபிக்கின்றன:
‘வருத்தப்பட்டு பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் (இயேசு) வாருங்கள்: நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்” (மத். 11:28).
‘அவன் என்னிடத்தில் (இயேசு) வாஞ்சையாயிருக்கிறபடியால் அவனை விடுவிப்பேன்: என் நாமத்தை அவன் அறிந்திருக்கிறபடியால் அவனை உயர்ந்த அடைக்கலத்திலே வைப்பேன்” (சங். 91:14).
இந்த ஏழை கூப்பிட்டான் கர்த்தர் (இயேசு) கேட்டு அவனை அவன் இடுக்கண்களுக்கெல்லாம் நீங்கலாக்கி இரட்சித்தார்” (சங். 34:6).
‘அவர் (இயேசு) தமது வசனத்தை அனுப்பி அவர்களைக் குணமாக்கி அவர்களை அழிவுக்குத் தப்புவிக்கிறார்” (சங். 107:20).
‘ஒருவனை அவன் தாய் தேற்றுவதுபோல் நான் (இயேசு) உங்களைத் தேற்றுவேன்” (ஏசா. 66:13).
‘நீ என்னால் (இயேசு) மறக்கப்படுவதில்லை” (ஏசா. 44:21).
‘கர்த்தர் (இயேசு) நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள்” (சங். 34:8).
‘இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்” (எபி. 13:8).
‘நானே (இயேசு) வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்: என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்” (யோவான் 14:6).
‘இழுந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் (இயேசு) வந்திருக்கிறார்” (லூக். 19:10).
‘அவருடைய (இயேசு) நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்” (யோவான் 1:12).
‘தேவன் தம்முடைய ஒரேபேறான குமாரனை (இயேசு) விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு அவரைத் தந்தருளி இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்” (யோவான் 3:16).
‘நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் (இயேசு) காயப்பட்டு நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்: நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது: அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்” (ஏசாயா 53:5).
‘நானே (இயேசு) நல்ல மேய்ப்பன்: நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான்” (யோவான் 10:11).
‘நாம் பெலனற்றவர்களாயிருக்கும்போதே குறித்த காலத்தில் (இயேசு) கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்” (ரோமர் 5:6).
‘பாவத்தின் சம்பளம் மரணம்: தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்திய ஜீவன்” (ரோமர் 6:23).
‘மனந்திரும்புங்கள் பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது” என்று கர்த்தராகிய இயேசு கூறினார் (மத்தேயு 4:17).
‘கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்” (அப்போ. 16:31).
‘என்னிடத்தில் (இயேசு) வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை” (யோவான் 6:37).
‘நான் (இயேசு) போய் உங்களுக்காக (பரலோக ராஜ்யத்தில்) ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணின பின்பு நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்” (யோவான் 14:3).
கர்த்தராகிய இயேசு சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன் இந்த உலகத்துக்கு வந்தார். அவர் சகல ஜனங்களுக்கும் நன்மை செய்கிறவராயும் சகலவித நோய்களையும் குணமாக்குகிறவராயும் சுற்றித்திரிந்தார். பரலோகத்துக்குச் செல்லும் வழியை அவர் ஜனங்களுக்குப் போதித்தார். ஒவ்வொரு மனிதனுடைய பாவங்களுக்காகவும் அவர் சிலுவை மரணத்தை ஏற்றுக்கொண்டார். அவர் மரித்தோரிலிருந்தெழுந்து இன்றும் ஜீவனுள்ளவராயிருக்கிறார். அவர் மீண்டும் வருவார். இன்றுங்கூட அவரிடம் வருகிற யாவருக்கும் அவர் நன்மை செய்கிறார்.
ஜெபம்:

‘கர்த்தராகிய இயேசுவே நான் உம்மை நேசிக்கிறேன் என் பாவங்களை மன்னித்து என் நோய்களைக் குணமாக்கும் எனக்குச் சமாதானத்தையும் இளைப்பாறுதலையும் மகிழ்ச்சியையும் தாரும். எனக்கு நித்திய ஜீவனைக் கொடுத்து என்னை ஆசீர்வதித்தருளும். ஆமென்”.

 

You can find equivalent English tract @

Jesus Loves, Jesus Helps