real god copy

real god _back

 

உண்மையான தெய்வம்

வாழ்க்கை எனக்குப் போராட்டமாக இருந்தது. என் மனைவி; மூன்று பிள்ளைகளுடன் என் மூச்சுகுழாயில் கட்டி வளர்வதாகவும், கொஞ்ச காலமே உயிர் வாழ முடியும் என்று மருத்துவர் சொல்லும் வரை நிம்மதியாக வாழ்ந்தோம். என் ஆயுளை நீட்டிக்க வேண்டுமானால் ஒலிச் சிற்றறை (எழiஉந டிழஒ) சேர்த்து பல அறுவை சிகிச்சைகளையும் செய்ய வேண்டும் என்றார்கள். பல மருத்துவ சோதனைகளுக்குப் பிறகு முதல் ஆபரேஷன் செய்யச் சென்றேன். ஒரு மணிநேரம் ஆகும் என்று சொல்லியிருந்தார்கள். ஆனால் அது நாள் முழுவதும் நடந்தது. அந்த வேதனை தாங்க முடியாததாயிருந்தது. என் தொண்டையை வெட்டி ஒரு குழாயைச் செருகி இருந்தனர். அந்தக் குழாயில் என் கட்டைவிரலை வைத்து மூடியபடி தான் பேச முடியும். வெற்றிகரமாக ஆபரேஷன் நடந்ததாகச் சொன்ன பத்து நாட்களுக்குப்பின், ஒரு மாலைப் பொழுதில், திடீரென்று என் வாய்க்குள் இரத்தம் நிரம்பியது. மூன்று மணி நேரம் இரத்தம் வருவதைக் கட்டுப் படுத்த செவிலியரும், மருத்துவர்களும் விரைந்து வந்து சிகிச்சை அளித்தனா.; ‘எல்லாம் முயற்சியும் செய்தாயிற்று’, என்று விரக்தியாக ஒரு மருத்துவர் சொன்னார். மரணத்திற்கு நெருங்கி இருந்ததை உணர்ந்து, ‘இயேசுவே உதவும்’ என்று கதறினேன். உடனே இரத்தம் வருவது நின்றது.     ஏன் இயேசுவின் பெயரைச் சொல்லி கூப்பிட்டேனென்றால், என் முதல் அறுவை சிகிச்சைக்கு முன் நடந்த நிகழ்ச்சியைப் பற்றிக் கூறவேண்டும். முதல் ஆபரேஷனுக்கு நான் காத்திருந்த வேளை, ஒரு பெரிய பயம் என்னை ஆட்கொண்டதால், என் ஆலயத்திலிருந்து ஆறுதல் பெற எண்ணினேன்.  கடவுள் எங்கோ தூரத்தில் இருப்பதாகவும், இயேசுவின் தாய் மேரிதான் கடவுளுக்கும் நமக்குமிடையே தொடர்பாளர் என்றும் எண்ணி இருந்தேன.; என் கஷ்ட நேரங்களில் ஜெபிக்க ஒரு பரிசுத்தவானையும் கொண்டிருந்தேன். உடனே நான் முழு பெலத்தோடும் ஜெபித்தேன.; அந்த ஞாயிற்றுக்கிழமை நான் ஆலயத்தில் நுழைந்த வண்ணமாகவே, ஏமாற்றத்துடன் வெளியே வந்தேன்.  வீட்டுக்குத் திரும்பும் போது என் இருதயம் நம்பிக்கையிழந்து சோர்வாய் காணப்பட்டது. அந்தப் பயத்திலிருந்து விடுதலை பெற ஒரு வழியும் புலப்படவில்லை. அருகில் உள்ள அபார்ட்மென்ட் சன்னல் வழியே ஒரு சுவிசேஷ இசையின்பால் என் கவனம் சென்றது. உடனே உள்ளே போக என் மனம் ஏவுதலால் உள்ளே சென்றேன். ஆறு பேர் இருந்த சபையில் கிறிஸ்தவப் பாட்டு பாடிக் கொண்டிருந்தனர். ஆராதனை முடிந்ததும், பாஸ்டர் என்னை வரவேற்று நான் உங்களுக்கு என்ன உதவி செய்ய வேண்டும்? என்று கேட்டார். நான் எனக்கு ஆபரேஷன் நடக்கப் போவதையும், அதன் ஆபத்தையும் கூறி,  ஜெபிக்கும் படிக் கூறினேன். அவர் ஜெபித்தபோது என் பயம் முழுவதும் என்னை விட்டு அகன்றது. இயேசு கண்டிப்பாக குணமளிப்பார் என்றும், தான் வந்து பார்ப்பதாகவும் கூறினார்.

முதல் ஆபரேஷனுக்குப்பிறகு அந்த விசுவாசிகளின் ஜெபம் என்னைப் பெலப்படுத்தியது. அவர்கள் அடிக்கடி என்னை வந்து பார்த்து பைபிளில் உள்ள சத்தியங்களைக் கற்பித்தனர். என் கண்கள் திறந்தன. முதன்முறையாக கடவுளுக்கும் நமக்கும் இடையே இயேசுகிறிஸ்து தான் தொடர்பாளர் என்றறிந்தேன். நான் ஜெபித்து சந்தோஷமாக இயேசுகிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு;, விவரிக்க முடியாத சமாதானமும் அவருடைய சமூகத்தின் அருகாமையையும் உணர்ந்தேன்.          முதல் ஆபரேஷனுக்குப் பிறகு நான் மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு அனுப்பப்பட்டேன். மருத்துவமனைக்கு வாரம் ஒருமுறை வந்து போக சொல்லி இருந்தார்கள்.  இறுதியாக, அவர்கள் என் ஆயுளை நீட்டிக்கும் கடைசி முயற்சியாக, என் ஒலி சிற்றறையை நீக்கும் இரண்டாவது ஆபரேஷன் செய்யும் நாளும் வந்தது. அப்போது என் புதிய கிறிஸ்தவ நண்பர்கள் பைபிளிலிருந்து ஒரு புதிய வாழ்க்கையின் மீது கர்த்தர் கிரியை செய்வார் என்ற அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டனர்.நானே உன் பரிகாரியாகிய கர்த்தர் (யாத் 15:26) எல்லாவற்றிக்கும் மேலாக சகோதரரே நீங்கள் வாழ்ந்திருப்பது போல் உங்கள் ஆத்துமாவும் வாழ்ந்திருக்க வேண்டுகிறேன் (3 யோவான் : 2) இந்த இரு வாக்குத்தத்தங்களும் இயேசு என்னை சுகமாக்குவார் என்று உறுதிகூறின.வெளி 1-18ல் மரித்தேன் ஆனாலும் சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன் ஆமென் நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவு கோல்களை உடையவராயிருக்கிறேன் என்று இயேசு கூறினார். என் டாக்டரின் மீது முழு நம்பிக்கை வைத்து அவரது ஒவ்வொரு வார்த்தையை நம்பியிருந்தாலும் நான் இயேசுவையும் அவர் வார்த்தைகளையும் நம்பினேன்.  ஒரு நாள் இரண்டாவது முறையாக ஆஸ்பத்திரிக்குத் திரும்பியபோது, பக்கத்து படுக்கையிலுள்ள இளைஞன் வயிற்று வலியால் துடித்தான். ஓர் ஆழமான மனதிரக்கம் என் மனதில் உண்டானது. நான் அவன் படுக்கைக்கு அருகில் சென்று, என் கையை உயர்த்தி, இயேசுவே இந்த இளைஞனின் வேதனையை தயவு செய்து எடுத்துப் போடும,; குணமாக்கும் என்று ஜெபித்தேன். உடனே அவன் குணமாகி எழுந்து நின்றான். இந்த அனுபவத்தி;;ற்குப் பிறகு என்னுடைய இரண்டாவது ஆபரேஷனைக் குறித்து அவ்வப்போது, இந்த இளைஞனைக் குணமாக்கிய இயேசு என்னையும் குணமாக்குவார் என்று நம்பினேன். அதே வாரம் டாக்டர்களின் ஆலோசனையை மீறி வீட்டிற்குச் சென்றேன   அதே வாரத்தில் நான் ஆஸ்பத்திரிக்குத் திரும்பி வராததன் காரணத்தைக் கேட்டு மூன்று கடிதங்கள் வந்தன. மூன்றாவது கடிதத்தில் என் நோயின் அபாயத்தால் நான் சாகவும் நேரிடலாம் என்று பயமுறுத்துவதாய் மூன்றாவது கடிதம் அமைந்திருந்தது. மேலும் அப்படியே சாக நேர்ந்தாலும் அதற்கு ஆஸ்பத்திரி பொறுப்பு இல்லை என்றும் தெரிவித்திருந்தது. ஆனால் நான் கர்த்தரின் வார்த்தையை அதிகமாக படிக்க படிக்க உள்ளத்தில் சமாதானமும் தைரியமும் பிறந்தது.

அதன்பிறகு என் மூச்சுக்குழாயில் தொடர்ந்து கட்டி வளர்ந்ததால. மூச்சுவிட அதிகமாகக் கஷ்டப்பட்டேன். எல்லா டாக்டர்களும் இது நடக்குமென்று  கூறியிருந்தாலும் நான் இயேசுவின் மேல் அதிக விசுவாசம் கொண்டு இயேசுவே என் பரிகாரி என்று நம்பினேன்.                  ஒருநாள் நான் ஜெபித்துக் கொண்டிருந்த போது யாரோ என் பெயரைக் கூப்பிட்டு ‘நீ ஒரு புது வீட்டுக்குப் போகும் போது முதலில் நீ என்ன செய்வாய்’ என்று கேட்டார். அது கர்த்தர் என்று அறிந்து முதலில் அதைச் சுத்தம் செய்வேன் என்று கூறினேன், பின்னர் அவர் விளக்கினார்.நான் உன்னை என் ஆலயமாக மாற்ற விரும்புகிறேன். முதலில் நீ முழுவதுமாக சுத்திகரிக்க வேண்டும் என்றார். கர்த்தர் என் பாவங்களை மன்னித்து அவருடைய பிள்ளை யாக மாற்றினார். ஆனால் என் பாவங்கள் முழுவதையும் நான் அறிக்கையிடவில்லை. எல்லாவற்றையும் ஆராய்ந்து அறிக்கை செய்யும் போது அவருடைய பரிசுத்த பிரசன்னத்தில் நிற்க தகுதியற்றவனாய் என்னால் அழத்தான் முடிந்தது. இயேசு என் இடத்தில் எனக்காக சிலுவையில் மரித்தார். அவர் எனக்காக செய்த தியாகத்தை உணர்ந்த  நேரத்தில் நன்றியுடன் நான் நிரம்பியபோதே நான் முற்றிலும் கழுவப்பட்டு பரிசுத்தமானேன். அந்த நேரமே என் மூச்சுத்திணறல் நின்றது.  ஒரு நாள் காலையில் இதுவரை அனுபவித்திராத அளவு மூச்சுத்திணறல் ஏற்பட்டு கண்விழித்தேன். ஜீவனுக்கும் மரணத்துக்கும் இடையே உள்ள போராட்டம் அது. எப்படியோ சமாளித்து எழுந்து முழந்தாளிட்டு ‘ஆண்டவரே நீர் என்னைக் குணமாக்கினால்  நான் உமக்காக ஏதாவது செய்வேன்’  என்றேன். என் முழு அர்ப்பணிப்புக்கும் காத்திருந்தார் போலும். உடனே பலமாக இருமினேன், திடீரென்று என் வாயிலிருந்து ஏதோ வந்தது போலிருந்தது. ஏன் கையில் துப்பி அது என்ன வென்று பார்த்தேன் அது கட்டி, நான் சுகமானேன். அவர் வாக்களித்தபடி என்னைக் குணமாக்கினார். என்னைக் குணமாக்கிய கர்த்தர் உங்களையும் குணமாக்குவார்.   இயல்பாக மூச்சுவிடவும், சாப்பிடவும் முடிந்ததில் எத்தனை சந்தோஷமாய் இருந்தது. ஆனால் என் தொண்டையில் ஒரு செயற்கை குழாய் மட்டும் செருகி இருந்தது. இரண்டாவது ஆபரேஷனுக்கு வருவேனென்று நினைத்து அதை டாக்டர்கள் அகற்றவில்லை அந்த நேரத்தில் அது மிகவும் வேதனையாகவும், எரிச்சலாகவும் இருந்தது. அதனால் கட்டியை குணமாக்கியது போல, அதையும் சரிப்படுத்த வேண்டுமென்று கேட்டேன். ஒவ்வொரு முறை நான் ஜெபித்தபோது அது என் தொண்டையில் கிரியை செய்திருக்க வேண்டும். ஆனால் பயங்கர வலியாகவும் இரத்தமும் கசிந்தது. அதனால் முற்றிலுமாக அதை விட்டு கடவுளைத் துதிக்க ஆரம்பித்தேன். ஒரு நாள், வேறுவிதமாக ஜெபிக்கும் எண்ணம் எனக்குள் வந்தது. அதை அகற்றுவதற்குப் பதில் அதை;கரையச் செய்ய வேண்டுமென்று ஜெபித்தேன். ஆண்டவரும் அதைத்தான் விரும்பி இருப்பார் போலும். அது முற்றிலுமாக கரைந்து போனது. டாக்டர்கள் ஆறுமாதங்கள் தான் நான் உயிரோடு இருப்பேன் என்றனர். ஆனால் பல வருடங்கள் ஆகி விட்டது. அவர் நாமத்தை மகிமைபடுத்த இன்னமும் சுகமாக இருக்கிறேன். எந்த வெளிப்படையான வடுக்களும் இல்லை. எக்ஸ்ரே போன்ற எல்லா சோதனைகளும் இயேசு என்னை பரிபூரணமாய் குணப்படுத்திவிட்டார் என்பதையே  நிரூபி;த்தன.அந்த நேரத்தில் நான் இயேசு கிறிஸ்துவுக்குக் கீழ்படிந்து முழுக்கு ஞானஸ்நானம் எடுத்து, பரிசுத்த ஆவியினால் அபிஷேகம் பெற்றேன். அவை இரண்டும் தேவனுடைய பிள்ளைக்குரிய இரு கட்டளைகள். (மத்தேயு 28:19 அப்போஸ்தலர் 2:38) அந்த வாக்குத்தத்தில் உண்மையாயிருந்து, கர்த்தர் என்னை குணமாக்கிய அற்புதத்தை கூறி,சேவை செய்து வருகிறேன்.இன்னமும் பெரிய காரியங்களைச் செய்யமுடியும்.  அவர் உண்மையான தெய்வம். இன்று ஏன் உங்கள் வாழ்வை அவருக்கு அர்ப்பணிக்கக்கூடாது?. நீங்கள் வியாதியோடிருந்தாலும் வேறு தேவைகள் இருந்தாலும் இயேசுவை நோக்கிக்கூப்பிடுங்கள். ‘என் நாமத்தில் எதைக்கேட்டாலும் தருவேன்’ யோவான் 14:14.  கர்த்தரால் என்ன செய்ய முடியுமென்பதில் எந்த இரகசியமும் இல்லை. பிறருக்கு செய்யும்போது உங்களுக்கும்  செய்வார்.           கெல்லி எம்.பர்க்

For more information, please contact: contact@sweethourofprayer.net

You can find equivalent English tract @

The Real God