GRACE_new-_in1123GRACE_new _1

கர்த்தருடைய அற்புதமான கிருபை

அந்நேரம் நான் 14வயதை எட்டியிருந்தேன். மதுவுக்கு அடிமையான குடிகாரனாகவும், எண்ண முடியாத பல தீயபழக்கங்களை உடையவனாகவும், நடத்தை மோசமானவனாகவும் இருந்தேன். ஒரு ஸ்பூனில் விஸ்கி உறிய ஆரம்பித்தது முதல் 5காலன் விஸ்கி குடிக்கும் வரை மாறியிருந்தேன். சரியாக வளர்க்கப்படாததாலும், கிறிஸ்துவ ஒழுக்கமும் இன்றி நானும் என் சகோதரர்களும் காட்டு மிருகங்கள் போல வளர்ந்திருந்தோம். இந்த உலகத்தின் அதிபதியாகிய சாத்தான் என் கண்களைக் கட்டியதால் சுயநலமும், பக்தியற்ற, அழிவுக்குள்ளான பரிதாபமான முறையில் நான் வாழ்ந்தேன்.

31வது வயதில் எனது பாவ வாழ்க்கையில் ஒரு திருப்பம் வந்தது. ஒரு இரவு குடித்துவிட்டு சுற்றி இருப்பவர்களிடம் சண்டை இட்டேன்.திருடவும் அழிக்கவும் கொல்லவும் வந்த சாத்தானின் ஏவுதலால்; எனது 38காலிபர் துப்பாக்கியால் நான்கு பேரையும் கொன்று விட தீர்மானித்தேன். அவர்களைச் சுட்ட பிறகு அவன் என்னையும் தற்கொலை செய்யும்படிக் கூறினான். ஆதனால் நான் வயிற்றில் இருமுறையும், ஒருமுறை நுரையீரலிலும், தலையில் ஒரு முறையுமாக ஐந்து முறை சுட்டேன்.

திடீரென்று என்னைச்சுற்றி பிரகாசமான வெளிச்சம் தோன்றி, இரைச்சலான வல்லமையான காற்று என்னை நோக்கி வந்தது போலிருந்தது. தொலைக்காட்சி; திரையில் பார்ப்பது போல் சிறுவயது முதல் என் பாவங்களைக் கர்த்தருடைய ஆவியானவர் எனக்குக் காட்டினார்.நான் ஒரு வழிதப்பிய பாவி என்றும், ‘பாவத்தின் சம்பளம் மரணம்’ என்றும் உணர்ந்தேன். என் ஆத்துமாவில் நரகத்தின் அக்கினி எரிவதை உணர்ந்தேன். ‘கர்த்தருடைய நாமத்தில் யார் கேட்டாரோ அவர் விடுவிக்கபடுவார்’; என்று தேவ வல்லமை கூறியது. உடனே கையில் துப்பாக்கியுடனும், உடம்பிலிருந்து இரத்தம் வழிந்தோடிக் கொண்டிருந்த அந்த இரவில் ‘இயேசுவே இரட்சியும்’ என்று கத்தினேன்.

உடனே திடீரென்று ஒரு அதிசயமான காரியம் நிகழ்ந்தது. பிசாசின் தூதர்களுக்குமிடையே ஒரு போராட்டம் நடந்தது. கர்த்தருடைய ஆவியானவர் அக்கினியாய் என்மேல் இறங்கி குடிப்பழக்கம், புகைபிடித்தல், விபச்சாரம், தூஷணம் ஆகியவைகளை கொண்டு; வந்த தீயசக்திகளை விரட்டினார். இயேசுவின் இரத்தம் என்னைச் சுத்திகரித்து, சந்தோஷம் எனக்குள் பொங்கியது. நான் ‘மறுபடியும் பிறந்து’ கடவுளின் பிள்ளையானேன். இனி சாத்தான் என்னை அடிமைபடுத்த முடியாது. இயேசு என்னை பரிசுத்த ஆவியினால் நிரப்பி தெரியாத புது பாஷையினால் நிரப்பி துதிக்கச் செய்தார். காயம்பட்ட நிலையோடு தள்ளாடியபடி உதவியற்றவனாய் ரயில் தண்டவாளத்தில் விழுந்தேன். சாத்தான் என்னைக் கொல்ல முயன்றான். என் சரீரம் சில்லிட்டு போனது. ரத்தம் ஒழுகியபடி பார்க்கும் போது ஒரு ரயில் வந்து கொண்டிருந்தது, ஆனால் ஆண்டவர் ஒரு காவலரை அனுப்பி கொடியசைத்து ரயிலை நிறுத்தும்படி செய்தார். காவலர் ஒரு சிகரெட்டை நீட்டினார். அது எனக்கு பரிசுத்தமில்லாததாய் தெரிந்தது. கர்த்தர் எல்லா தீய பழக்கங்களிலுமிருந்து முற்றிலுமாக என்னை விடுவித்திருந்தார். ஒரு புதிய வாழ்வைத் தந்தும் இருந்தார். எவ்வளவு அற்புதமான கிருபை!

மருத்துவமனைக்கு எடுத்துச் சென்ற போது எங்கள் எல்லாரையும் காப்பாற்ற முடியாது சாகும் நிலையிலிருந்தோம். ஆனால் கர்த்தர் சில கிறிஸ்தவர்களை அனுப்பி ஜெபிக்கசெய்து ஐந்துபேரும் உடனடியாக குணமானோம், இயேசு ஆத்துமாவை இரட்சிப்;பவர் மட்டுமல்ல, உடம்பைக் குணமாக்குகிறவரும் அவரே.’அவர் தழும்புகளால் குணமானோம்’. நம் புத்திக்கெட்டாத அளவு கர்த்தரின் வழிகள் நிறைவானவை. சின்ன குருவிகள் மீது கூட  அக்கறை கொள்பவர், அவரைத் தேடும் நம்மீது எவ்வளவு அக்கறை கொள்வார்.

இயேசு கிறிஸ்து என் இரட்சகர் – என் பரிகாரி, அதன் பின்னர் என் வழக்கறிஞர் ஆனார். என் கோர்ட் கேஸின் போது நீதிபதி முன்பு பாதுகாப்பற்ற நிலையில் நின்றேன். எல்லாம் எனக்கு விரோதமாய் இருந்தது. ஆனால் நீதிபதியின் உள்ளத்தை ஆண்டவர் தொட்டார். எனக்கு 20 வருடங்கள் சிறைத்தண்டனை கிடைத்தது. சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் இருந்தாலும் ஒரு பறவை போல் கர்த்தர் என் ஆன்மாவை மாற்றி இருந்தார். ‘யார் பாவத்துக்கு அடிமைப்பட்டு இருந்தாலும் குமாரன் உங்களை விடுதலையாக்குவார் நாம் விடுதலை ஆவோம்.’

சிறையில் இருக்கும்போது கிறிஸ்துவை அறிய வாஞ்சையுடன் ஜெபித்தேன். முதன் முறையாக சிறை அறைக்குள் நுழைந்தபோது பரிசுத்த ஆவியானவர் என் படுக்கை விரிப்பைத்திறந்து பார்க்கும்படி என்னைத் தூண்டினார். திறந்துபார்த்த போது ஒரு புத்தம் புதிய பைபிள் இருந்தது. அல்லேலுயா! என்ன பிரச்சனையென்றால், எனக்கு வாசிக்கத் தெரியாது. ஆனால் எல்லாவற்றையும் நேர்த்தியாகச் செய்கிற தேவன் எனக்கு நாளுக்கு நாள் கற்பித்தார்.

பைபிளை வாசித்தபேது, யூத பரிசேயரான சவுல் எப்படி மனம் அற்புதமாக மாறினான் என்று அறிந்தேன். இன்றைய நிறைய மனிதர்களைப் போல மேசியாதான் மனுஷ குமாரன் என்றறியவில்லை. மத வைராக்கியத்தால் அந்த நாளிலிருந்த பல கிறிஸ்தவர்களைக் கொன்றான். ஆனால் கர்த்தர் அளவற்;ற கிருபையினால் இப்படிப்பட்ட மனிதனுக்காகவும் மனமிரங்கினார். அவனுடைய மனமாற்றத்துக்கு மூன்று நாட்களுக்கு பின் பவுல் (சவுல்) தண்ணீர் ஞானஸ்நானம் எடுத்து பரிசுத்த ஆவியைப் பெற்றார் என்று வாசித்தேன். இது என் மனதில் பதிந்தது. முழுக்கு ஞானஸ்நானம் எடுத்து கர்த்தருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்தேன். தண்ணீரில் மூழ்குவதன் மூலம் முதல் வாய்ப்பாகக் கருதினேன்.

சிறையில் பல வானொலி ஒலிபரப்புகளைக் கேட்டும், தபால்மூலமும் கற்றேன், ஆனால் அவர்கள் இலக்கியத்தைக் கற்பதுதான் மிகுந்த குழப்பத்தைத் தந்தது.   கர்த்தர் அந்தப் புத்தகங்களை அழித்துவிடச் சொன்னார். அவரே கற்பிக்க ஆரம்பித்தார். ‘பரிசுத்தாவியானவர் ஒருவருக்குள் வரும்போது அவரே போதிப்பார்.’ வேறு யாராலும் அவரைப்போல் கற்பிக்க முடியாது. ‘கர்த்தரின் வேதம் எனக்கு இரவும் பகலும் எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது’. ஆறுதலின் ஊற்றாகவும், பெலனாகவும், வழிகாட்டுதலாகவும் இருந்தது. சிறையில் இருந்த நாட்களிலெல்லாம் பரிசுத்தமாகவும் வெற்றியாகவும் ஜீவிக்க உதவியது.

கர்த்தரின் அன்பு என்னில் பெருகியதால் மற்ற கிறிஸ்தவர்களோடு சேர்ந்து பிணியாளிகளுக்கு ஜெபிக்கவும், பைபிள் வகுப்பு எடுக்கவும் செய்தேன். நிறைய தடையாகவும் சோதனையாகவும் எங்கள் வாழ்வு பயமுறுத்தபடவும் இருந்தாலும் கர்த்தரின் நாமத்தினால் எங்கள் தலையை உயர்த்தி அவரை நோக்கி பார்த்து அவரை மகிமை படுத்தினோம்.

கடைசியாக 13வருடம் கழித்து நன்னடத்தையினால் விடுதலை ஆனேன். சிறையிலிருந்து வெளியே வந்து எவ்வாறு பவுல் ஜெபிக்கிற பரிசுத்தவான்களோடு பேதுருவைப் போல என்னையும் அற்புதமாக சில கைவிடப்பட்ட கிறிஸ்துவர்களோடு அற்புதமான பெரிய காரியங்களை அனைவருக்கும் சொல்லி வருகிறேன். இன்னும் அற்புதம் செய்வார். அவர் உண்மை தெய்வம். பரிசுத்தவான்களோடு அவருக்கு ஊழியம் செய்ய உதவினார். எனக்காக சிலுவையில் உயிர்விட்ட அவருடைய ஊழியத்துக்காக என் முழு வாழ்வையும் ஒப்படைத்தேன். நான் அடிக்கடி ‘ஏன் தகுதியில்லாத என்னை அவர் ஊழியத்துக்காக தெரிந்து கொண்டார் பெலவீனர்களைப் பெலவான்களாக்கவும், பேதைகளை ஞானிகளாக்கும் தெய்வம் அற்பமானவைகளை சிறந்தவைகளுக்கு மேலாகவும் ஒன்றுமில்லாதவைகளை, அவர் சமூகத்தில்தகுதிப்பட அழைத்த பூரணமுமானவர் அவர்.   இன்று ஏன் உங்கள் முழுவாழ்வையும் இயேசுவுக்கு அர்பணிக்க கூடாது? உங்களுக்கு சுகமோ, அல்லது ஏதாவது தேவைகள் இருப்பின் இயேசு வாக்களித்தபடி கூப்பிடுங்கள் (என் நாமத்தில் எதைக்கேட்டாலும், அது உங்களுக்குக் கொடுக்கப்படும்.

கர்த்தர் செய்வதில் எந்தச் சந்தேகமும் இல்லை மற்றவர்களுக்குச் செய்யும் போது உங்களுக்கும் நிச்சயம் செய்வார்.

என் நண்பரே! என்னைப் போன்ற பாவியைக் கூட மீட்க முடியுமென்றால் உங்களை மீட்க மாட்டாரா? அவரிடம் உண்மையாய் தேடி வருகிற பாவியான முழு உலகையும் சுத்திகரிக்கவும் மீட்கவும் பாதுகாக்கவும் அவரால் முடியும். கர்த்தர் சீக்கிரமாய் வருகிறார், அவரைச் சந்திக்கும் நாள் வரை ஜெயமாக பரிசுத்தமாக வாழ உதவி செய்தார்

என் இயல்பு சிறியதாகவும்

அப்பணிக்கு மதிப்பில்லாததாகவும்

இருப்பினும் உம் அன்பு

பெரியதும் அற்புதமுமானது!

தந்தையே! என் எல்லா பாவங்களுக்காகவும் நான் மனஸ்தாபடுகிறேன் (எல்லாவற்றையும் விரிவாக அறிக்கையிடவும்) என்னை உம் பரிசுத்த ஆவியினால் நிரப்பி உம் வருகைக்கு ஆயத்த படுத்தும்.

குறிப்புகள்:

நீதி மொழிகள் 14:12 , யோவான் 10:10  3:3-5, 8:34,36 16:13 2:27  ரோமர் 6:23 , 10:9-13  1கொரி 14:2 , 14:18 யோவா 8:34,36 10 மத் 8:16,17 பேது 2:24 , யோவா 16:13 அப் 2:1-4  9-1-20 யோது 2-27 கொரி 1-26-29 ரோமர் 10-9-13 அப் 2-1-4 மத் 8:16 1பேதுரு 2:24 லூக் 14:26-33 பிலி 1:21

 

You can find equivalent English tract @

The Amazing Grace of God