parable-of-Kingdom123

 

பரலோக ராஜ்ஜியம் பற்றிய உவமை

அன்றியும், பரலோக ராஜ்ஜியம், கடலிலே போடப்பட்டு, சகலவிதமான மீன்களைச் சேர்த்து, வாரிக்கொள்ளும் வலைக்கு ஒப்பாயிருக்கிறது. அது நிறைந்தபோது, அதைக் கரையில் இழுத்து உட்கார்ந்து, நல்லவைகளைக் கூடைகளில் சேர்த்து, ஆகாதவைகளை எறிந்துபோடுவார்கள்.

‘இவையெல்லாம் புரிந்து கொண்டீர்களா’ என்று இயேசு கேட்டார் –மத்தேயு 13: 47-51

நான் என்ன செய்யவேண்டும்?

1.மனந்திரும்பி, நற்செய்தியை ஏற்றுக் கொள்ளுங்கள்

‘காலம் நிறைவேறிற்று. தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிற்று, மனந்திரும்பி சுவிஷேசத்தை விசுவாசியுங்கள்’ என்றார்.(மாற்கு 1:15)

2.கர்த்தரில் நம்பிக்கை வைத்து, அவரைச்சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்ளுங்கள: ‘அவருடைய நாமத்தின் மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும் படி அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார்;'(யோவான் 1:12)

3.உங்கள் பாவங்களை இயேசுவிடம் அறிக்கை செய்யுங்கள்:   நம்முடைய பாவங்களை அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து, எல்லா அநியாயத்தையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்|. ( யோவான்: 1-9)

4.தண்ணீர் ஞானஸ்நானமும் பரிசுத்தாவியும்   பெற்றுக்கொள்ளுங்கள:நீங்கள் மனந்;திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள். அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்(அப் 2:38)

5.சுவிசேஷத்தின்படி நடங்கள்:  என் கட்டளைகளையும் போதகத்தையும் கண்மணியைப் போலகாத்துக்கொள்'(நீதி 7:2)

தீர்மானிப்பது நீங்கள்தான்!!!;

நீ சொன்ன தீர்ப்பின்படியே ஆகும் ( 1 ராஜா 20-40)

 

You can find equivalent English tract @

Parable of the Kingdom