insurence_new123

மொத்தமான காப்பீடு

உடல் நலம்

வீடு

தீவிபத்து

வாழ்க்கை

நற்செய்திக்காப்பீடு

உடல் நலம்:

இன்றைய மருத்துவ செலவுகள் அதிகமாக இருப்பதுபோல்,ஆரோக்கிய காப்பீட்டுத் தொகையும் அதிகமாக உள்ளது. நீங்கள் உங்கள் எல்லா நோய்களையும்; சுகமாக்கக் கூடிய ஒரு மருத்துவரை என்றாவது சந்தித்து இருக்கிறீர்களா?   நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயம்பட்டு, நம்முடைய அக்கிரமத்தினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார். நமக்குச் சமாதானம் உண்டு பண்ணும் ஆக்கினை அவர் மேல் வந்தது.அவருடைய தழும்புகளால் குணமாகிறோம். (ஏசாயா 53:5)

வீடு:

எல்லாவித சிதைவுகள், திருட்டு, அழிவுகளிலிருந்து உரிமையாளர்களுக்கு, வீடுகள் காப்பீடு செய்வதன் மூலம் இந்தப் பாதுகாப்பு உதவுகிறது. சன்னல்களிலும், கதவுகளிலும் உள்ள இரும்பு கம்பிகள், திருடர்களுக்கான அபாயசங்குகளும், பக்கத்திலுள்ளோர் காவலும், வீட்டு உரிமையாளர்களுக்குப் பயனும்; அளிப்பதில்லை, மன அமைதியும் தருவதில்லை.  என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு. அப்படி இல்லாதிருந்தால் நான் உங்களுக்குச் சொல்லி இருப்பேன். ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம் பண்ணப்போகிறேன். (யோவான் 14:2,3)

தீ:

நெருப்பு வீடுகளையும்,சொத்துக்களையும்,அழிக்கிறது.சில மீண்டும் பெற இயலாது. ஆனால் நித்தியத்தில் உள்ள தீயானது, என்றென்றும் இருக்கிறது. அந்த நெருப்பிலிருந்து உங்களைப் பாதுகாத்துக்கொள்ள காப்பீடு இருக்கிறதா?  ஜெயங்கொள்ளுகிறவன் எல்லாவற்றையும் சுதந்தரித்துக்கொள்ளுவான்;. நான் அவன் தேவனாயிருப்பேன், அவன் என் குமாரனாயிருப்பான்.  பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகரும், விபசாரக்காரரும், சூனியக்காரரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்றார். (வெளி 21:7,8)

வாழ்க்கை:

நிறைய பேர் தங்கள் ஆயுளுக்கு ஆயிரக்கணக்கான டாலர்கள் காப்பீடு செய்திருக்கின்றனர். ஆனால் யார் பயனை அடைகிறார்கள்? இறக்கும் போது உங்களுக்கு என்ன மதிப்பு இருக்கிறது?   தேவன், தம்முடைய ஒரே பேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ, அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, அவரைத்தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார். (யோவான் 3:16)

 

உரிமம் பெற நிபந்தனைகள

1.நீங்கள் ஒரு பாவி என்பதை உணருங்கள்:  பாவத்தின் சம்பளம் மரணம். தேவனுடைய கிருபை வரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் உண்டான நித்திய ஜீவன்.(ரோமர் 3:23.)  நமக்குப் பாவமில்லையென்போமானால் நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம் (1 யோவான்1:8)

2.பாவத்தின் விளைவு நரகம் என்று உணருங்கள்: துன்மார்க்கர்களும்,தேவனை மறக்கிற எல்லா ஜாதிகளும் நரகத்திலே  தள்ளப்படுவார்கள்.       (சங்கீதம் 9:17) 3.உங்கள் சொந்த முயற்சியால் உங்களைப் பாதுகாக்க முடியாது என்று உணருங்கள்: சேராபீன்களில் ஒருவன் ‘அது உன் உதடுகளைத் தொட்டபடியினால் உன் அக்கிரமம் நீங்கி உன் பாவம் நிவிர்த்தியானது’என்றான்.(ஏசாயா 64:6)

4.மனந்திரும்பி காத்தருக்குக் கீழ்ப்படியுங்கள்:  இப்பொழுதே மனந்திரும்ப வேண்டுமென்று எங்குமுள்ள மனுஷரெல்லாருக்கும் கட்டளையிடுகிறார்.(அப் 17:30)

5.இயேசுவை இரட்சகரென்று நம்புங்கள்: தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல், நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்(யோவான் 3:16)

6.உங்கள் பாவங்களை இயேசுவிடம் அறிக்கை செய்யுங்கள்:  நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால் பாவங்களை நமக்கு மன்னித்து ,எல்லா அநியாயத்தையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.(1 யோவான் 1:9)

7.தண்ணீர் ஞானஸ்நானமும்,பரிசுத்தஆவியையும் பெற்றுக் கொள்ளுங்கள்: நீங்கள் மனந்திரும்பி இயேசுகிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள். அப்பொழுது, பரிசுத்தஆவியைப் பெற்றுக் கொள்வீர்கள்.(அப் 2:38)

8.திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் மாத்திரமல்ல, அதன்படி செய்கிறவர்களாயும் இருங்கள்.;: அல்லாமலும், நீங்கள் உங்களை வஞ்சியாதபடிக்குத் திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் மாத்திரமல்ல, அதின்படி செய்கிறவர்களாயும் இருங்கள்.(யாக்கோபு 1:22)    ஒப்பந்தத்துக்கான நிபந்தனைகள்  நித்தியத்துக்கான ஒப்பந்தம்,பணமோ அல்லது நற்கிரியைகளோ அல்ல, செலுத்தியாயிற்று. இயேசு சிலுவையில் மரிக்கும் போதே இதற்கான தவணை, ஈட்டுத் தொகை எல்லாமும் செலுத்திவிட்டார். கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவுகிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு.(எபேசியர் 2:8) விசுவாசத்தில் வேரூன்றிநிலைக்கவும் இது உதவுகிறது.(எபேசியர்: 3:17)

 

You can find equivalent English tract @

Free All inclusive Insurance Policy