Heaven or hell

மோட்சமா? நரகமா? என்று தேர்ந்தெடுங்கள்;

எதைத் தேர்ந்தெடுப்பீர்கள்? எங்கே உங்கள் நித்தியத்தைக் கழிப்பீர்கள்?

நீங்கள் முடிவை எடுக்கும் முன்பு இந்த உண்மைகளை அறிந்து கொள்ளுங்கள். 1.நியமனம் எல்லாருக்கும் கடவுளோடும் மரணத்;தோடும் உண்டு.’ஒரே தரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்பை மனுஷருக்கு  நியமிக்கப்பட்டிருந்தபடியே'(எபிரெயர் 9:27) 2.முதல் மனிதனாகிய ஆதாம் வழியில், பாவத்தில் பிறந்து, பாவியாக வாழ்கிறான்.இதோ நான் துர்க்குணத்தில் உருவானேன். என் தாய் என்னைப் பாவத்தில் கர்ப்பம் தரித்தாள.; ஆதலால் மனிதன் தன் பாவத்தால் பிசாசுக்கு அடிமையாகிறான்;(சங்கீதம் 51:5) இப்படியாக, ஒரே மனுஷனாலே பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்ததுபோலவும், எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால், மரணம் எல்லாருக்கும் வந்ததுபோலவும் இதுவுமாயிற்று.(ரோமர் 5:12)   3.பாவஞ் செய்கிறவன் எவனும் பாவத்துக்கு அடிமையாயிருக்கிறான். அவன் பொய்யனும் பொய்யனுக்குப் பிதாவுமாயிருப்பான்.(யோவான் 8:34, 44) 4.எந்த மனிதனும் நற்கிரியைகள், உறுதிமொழிகள், நல்ல தீர்மானங்கள், தத்துவங்கள் அல்லது மனிதனால் உண்டாக்கப்பட்ட தெய்வங்களால்  இதற்கு தப்பிக்க முடியாது.                  ஒருவனாவது தன் சகோதரன் அழிவைக்காணாமல் இனி என்றைக்கும் உயிரோடிருக்கும்படி, எவ்விதத்தினாலாவது அவனை மீட்டுக் கொள்ளவும், அவனை மீட்கும் பொருளை தேவனுக்குக் கொடுக்கவும் கூடாதே.(சங்கீதம் 49: 7, 8) 5.கர்த்தர் பரிசுத்தராயிருப்பதால் அவர் வாசம் செய்யும் பரலோகில் உடன்வாசம் செய்ய முடியாது. எரிகிற அக்கினி கடலில் பாவிகள் தள்ளப்படும் இறுதி நியாயத் தீர்ப்பே, நித்தியமாய் அனுபவிக்கும் தண்டனையாகும்.பாவத்தின சம்பளம் மரணம்.(ரோமா 6:23)  பாவத்தினால் பிசாசுக்கு அடிமையாகி தண்டனைக்கு ஆளாகாமல் கர்த்தர் தம் அளவில்லாத அன்பினால் அதிலிருந்து தப்பிக்க கீழ்கண்ட வழிகளை வைத்துள்ளார் அவரிடம்.    1.நம்மை நாம்,பாவிகள் என்று உணர்ந்து,பாவங்களை விட்டு மனந்திரும்பி,இயேசு கிறிஸ்துவினிடத்தில் பாவமன்னிப்பு கேட்கவேண்டும். ‘ஆனபடியினாலே கர்த்தருடைய சந்நிதானத்திலிருந்து இளைப்பாறுதலின் காலங்கள் வரும்படிக்கும், முன்னே குறிக்கப்பட்ட இயேசுகிறிஸ்துவை அவர் உங்களிடத்தில் அனுப்பும்படிக்கும்'(அப் 3:19)

நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்(1. யோவான் 1:9) 2.இரட்சிப்படைய சுவிஷேத்தில் நம்பிக்கை வைத்து அவர் நாமத்தில் கூப்பிடுங்கள்: நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்.(ரோமர் 5:8) 3.நீங்கள் மனந்திரும்பி பாவ மன்னிப்படைந்தாலும் பழைய மனுஷன் அடக்கம் பண்ணிடுவதற்கொப்பான முழுக்கு ஞானஸ்நானம் பெற வேண்டும். நாமும் புதிதான ஜீவனுள்ளோராய் நடந்து கொள்ளும் படிக்கு, அவருடைய மரணத்திற்குள்ளாக்கும் ஞானஸ்நானத்தினாலே கிறிஸ்துவுடனே கூட அடக்கம் பண்ணப்பட்டோம்.(ரோமர் 6:4) 4.அதன் பின்னர் அந்நியபாஷை அடையாளத்துடனே பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ளவேண்டும். எப்படி பிசாசின் ஆவி பாவம் செய்ய தூண்டுகிறதோ, அப்படியே பரிசுத்த ஆவியானவர் நீதியையும்; பரிசுத்தமும் செய்ய தூண்டுவார். கர்த்தர் உங்களை நேசிக்கிறார். உங்களுக்கு நித்திய வாழ்வைத் தரும்படி வாக்களித்துள்ளார் இன்றே உங்கள் வாழ்வை ஒப்படையுங்கள். (அப் 1:8)

முடிவு உங்களுடையது நரகம் 1.என் பாவங்களால் சாத்தானைச் சேவிக்கும் பழக்கத்தைத் தேர்ந்தெடுக்கிறேன். 2.ஆண்டவர் அன்பையும் அவர் எனக்காக வைத்திருக்கும் மீட்பையும் ஏற்றுக் கொள்ளமாட்டேன். 3.நித்தியகாலமெல்லாம் நரகத்திலிருந்து தப்பிக்க வேண்டாமென்று நான் தீர்மானிக்கிறேன். அப்பொழுது, இடதுபக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து அவர்: சபிக்கப்பட்டவர்களுக்காகவும் என்னை விட்டுப் பிசாசுக்காகவும், தூதர்களுக்காகவும் ஆயத்தம் பண்ணப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போங்கள்.(மத்தேயு 25:41)  மோட்சம் 1.பிசாசிடமிருந்தும் அவன் அடிமைதனத்தினின்றும் தப்பித்து, கர்த்தராகிய இயேசுகிறிஸ்து மூலம் அவர் எனக்கு வைத்திருக்கும் மீட்பைப்பெற்றுக் கொள்கிறேன்.  2.நீதியோடும் பரிசுத்தமுமான ஒரு தெய்வத்தை ஆராதித்து அவருக்குக் கீழ்ப்படிவேன்.  3.கர்த்தரின் வாக்குத் தத்தத்தின்படி நித்தியமாக அவரது பரிசுத்த நகரத்தில் வாழ தீர்மானிக்கிறேன்.  நல்லது, உண்மையும் உத்தமுமான ஊழியக்காரனே, உங்கள் எஜமானனுடைய நித்திய சந்தோஷத்துக்குள் போங்கள்.(மத்தேயு 25:23)

For more information, please contact: contact@sweethourofprayer.net

You can find equivalent English tract @

Heaven or hell