மகனே நான் உன்னை வயிற்றில்
சுமக்கும்போதே
பல கஷ்டங்களிலும் களிகூர்ந்தேன்
நான் உன்னை பெற்ரெடுத்த பின்
இரவு பகல் தூக்கம் இல்லாமல்
உன்னை வளர்த்தேன்
நான் பசியில் இருந்து
உன் பசியை ஆற்றினேன்
நீ வியாதிப்பட்டபோது உன்னை காப்பாற்ற
என் இருதயம் துடித்த துடிப்பு உனக்கு
தெரியாது….
உன்னை படிக்க வைக்க நான் பலரது
உதவியை நாடினேன்
அன்று
நீ பள்ளிக்கூடம் செல்ல உன் பசியை
போக்கி மணிஅடிக்குமுன்
உன்னை அனுப்பினேன்
இன்று
என் பசி தீர எப்போது மணி அடிக்கும்
என்று காத்திருக்கிறேன்
அன்று
உன் துணியை துவைத்து உன்னை
அழகுபடுத்தி பள்ளிக்கு அனுப்பினேன்
இன்று
என் துணியை துவைக்க பெலனில்லாமல்
அழுக்கு துணியை உடுத்துகிறேன்
அன்று
நீ கேட்ட தின்பண்டத்தை
கஷ்டத்திலும் உனக்கு வாங்கி தந்தேன்
இன்று
நான் ஆசைபட்ட தின்பண்டம்
எனக்கு கிடைக்கவில்லையே மகனே
அன்று
உன் முகத்தில் ஓயாமல் முத்தம் செய்தேன்
நீயும் பதில் முத்தம் தந்தாய்
இன்று
நீ ஒரு முத்தமாவது தருவாய்
என்று கண்ணீருடன் காத்திருக்கிறேன்
மகனே….
என் மகனே
நீ கேட்டதை தராமல் இருந்தேன்
உன் நன்மைக்காக
நீ சொன்னதை கேட்காமல் இருந்தேன்
உன் நலனுக்காக
தீய நண்பர்களை விட்டுவிடு என்றேன்
உன் வாழ்வுக்காக
நான் சொன்னது தவறு என்று
நீ நினைத்தால்
தயவு செய்து என்னை மன்னித்து
என்னை உன்னுடன் அழைத்துச் செல்
என் மகனே…..
உன்னைப் பெற்ற தகப்பனுக்குச்
செவிகொடு:
உன் தாய் வயது சென்றவளாகும்
போது அவளை அசட்டை
பண்ணாதே.
நீதிமொழிகள் : 23:22(Bible)
உனக்கு நன்மை உண்டாயிருப்பதற்கும்,
பூமியிலே வாழ்நாள்
நீடித்திருப்பதற்கும்
உன் தகப்பனையும் உன் தாயையும்
கனம்பண்ணுவாயாக…..
எபேசியர் : 6:2,3(Bible)