Olimayamana_edhirkalam-tamil123Olimayamana_edhirkalam tamil page2

 

உங்களுக்கு ஒளிமயமான எதிர்காலம்

தங்களுடைய எதிர்காலம் ஒளிமயமாயிருக்க வேண்டுமென விரும்பாதவர் எவருமிலர். இதற்காகவே பலரும் பலவிதங்களிலும் முயற்சி செய்து பிரயாசப்படுகின்றனர். இருப்பினும் அப்படிப் பிரயாசப்படுகிற எல்லோரும் மேற்கூறிய தங்களது குறிக்கோளை எய்துகின்றனரா என்றால் ‘இல்லை” என்றே நாம் சொல்ல வேண்டும். ஏனெனில் பெரும்பாலோர் வாழ்க்கையில் திருப்தியற்றவர்களாயிருப்பதையே நாம் காண்கிறோம். அநேகரும் பலவித பிரச்சினைகளாலும் கவலைகளினாலும் நிறைந்து நிம்மதியற்றவர்களாக இருக்கின்றனர். ஆனால் வாழ்க்கையில் ஒளிமயமான எதிர்காலத்தை நாம் அனுபவிக்க முடியுமா என்ற கேள்விக்கு ‘முடியும்” என்ற பதிலை வேதாகமம் கூறுகிறது. ஆகவே இதை வேதாகமத்தின் அடிப்படையில் நாம் ஆராய்ந்து அறிந்துகொள்வது அவசியமாகும்.
ஆதியிலே மனிதனை உண்டாக்கினபோது அன்புள்ள கடவுள் தாம் அவனுடன் உறவாடும் பொருட்டு அவனைத் தம்மைப் போல் அன்பு பரிசுத்தம் சுயாதீன சித்தம் மகிமை முதலியவை உடையவனாகவும். வியாதி மரணம் கவலை சாபம் போன்றவை இல்லாதவனாகவும் சிருஷ்டித்தார். ஆனால் மனிதன் தன் ஆசை இச்சைகளால் இழுக்கப்பட்டு தன்னுடைய கீழ்ப்படியாமையினிமித்தம் கடவுளை விட்டுப் பிரிந்து இன்றைய நிர்ப்பந்தமான நிலைக்கு வந்துவிட்டான். முழு மனிதவர்க்கமும் பாவம் வியாதி தரித்திரம் துக்கம் ஆகியவற்றால் பீடிக்கப்பட்டு அதிலிருந்து தப்பிக்கொள்ளும் வழியைத் தேடிக்கொண்டிருக்கிறது. மேலும் மெய் சமாதான சந்தோஷத்தைத் தேடி மனுக்குலம் அலைந்துகொண்டிருக்கிறது. இதன் காரணமாக அல்லவா உலகில் எத்தனையோ சமயங்களும் மதங்களும் தத்துவங்களும் தானதர்மங்களும் தோன்றியிருக்கின்றன! மனிதன் கடவுளை உண்மையாய்த் தேடும்போது அவரும் அவனை நாடி வருகிறார். ஆனால் அவர் நீதியுள்ள நியாயாதிபதியாகவும் பரிசுத்தமுள்ளவராகவும் இருப்பதால் பாவஞ்செய்கிற மனிதனோடு அவருக்கு நேரடியாக உறவாட இயலாமலிருந்தது. பொய் களவு கொலை மது அருந்துதல் விபச்சாரம் போன்றவை மட்டுமின்றி. நம் மனதில் தோன்றும் பெருமை ஆசை இச்சைகள் போன்ற பொல்லாத எண்ணங்களுங்கூட பரிசுத்தமுள்ள கடவுளுக்கு முன்பாகப் பாவங்களாகக் காணப்படுகின்றன. ‘பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும்” (எசே. 18:4). என்றும் ‘பாவத்தின் சம்பளம் மரணம்” (ரோமர் 6:23) என்றும். வேதாகமத்தில் நாம் வாசிக்கிறோம். இது ஆத்துமாவில் உண்டாகும் மரணமாகும். கட்டுப்பாடற்ற துன்மார்க்க நடத்தையின் மூலம் ‘எய்ட்ஸ்” போன்ற பலவித நோய்கள் மனிதனைக் கொல்லுகின்றன. இது சரீர மரணமாகும். இவ்வாறு பாவத்தின் மூலமாகவே மரணம் உலகத்திற்கு வந்தது என நாம் காண்கிறோம்.
நாம் எல்லோரும் ஏதாவது ஒரு நாளில் மரணத்தைச் சந்திக்க வேண்டும் என்பது நிச்சயம். அதற்குப் பின்பு நம் உடல் மண்ணாய் அல்லது சாம்பலாய்ப் போனாலும் நமக்குள்ளிருக்கும் அழியாத ஆத்துமா நித்திய நியாயத்தீர்ப்புக்காகக் காத்துக்கொண்டிருக்கும். அந்த ஆத்துமா மீண்டும் மறு ஜென்மமெடுத்து வேறு சரீரத்தில் இவ்வுலகில் வருவதில்லை. ஏனெனில் ‘ஒரேதரம் (பல முறையல்ல) மரிப்பதும் பின்பு நியாயத்தீர்ப்படைவதும் மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறது” என்று வேதாகமம் தெளிவாகக் கூறுகிறது (எபி. 9:27). ஆகவே மரித்த பின் நமக்கொரு நியாயத்தீர்ப்பு வைக்கப்பட்டிருப்பதால் இவ்வுலகில் நாம் செய்யும் பாவங்களுக்காக மரணம் நம்மைச் சந்திக்கும் முன்பே ஒரு பரிகாரம் செய்தாக வேண்டும் அதாவது பாவமன்னிப்பு பெற வேண்டும்.
இதைக் குறித்து நம்முடைய அபிப்பிராயம் எதுவாயிருந்தாலும் சரி நாம் எல்லோரும் இந்த உலகத்தை விட்டுக் கடந்து போவது நிச்சயம். அதன் பிறகு சதாகாலங்களிலும் கடவுள் இருக்கும் சந்தோஷமுள்ள மோட்சத்திலோ அல்லது என்றைக்கும் முடிவில்லாத வேதனை நிறைந்ததும் பிசாசுகளுக்காக உண்டாக்கப்பட்டதுமான நரகத்திலோ நாம் இருக்கப்போவது நிச்சயம். அதாவது இவ்வுலகில் வாழ்ந்தபோது தங்கள் பாவங்களுக்காகக் கடவுளிடம் பாவ மன்னிப்புப் பெற்றவர்கள் மோட்ச ராஜ்யத்திலும் பாவத்திலேயே தொடர்ந்து ஜீவித்தவர்கள் நித்திய நரகாக்கினையிலும் பங்கு பெறுவர். இதைக் குறித்து அநீதிமான்கள் நித்திய ஆக்கினையை அடையவும். நீதிமான்களோ நித்திய ஜீவனை அடையவும் போவார்கள் என்று கடவுள்தாமே சொல்லியிருக்கிறார் (மத். 25:46).
இப்படிப்பட்ட பயங்கர தண்டனை பாவஞ்செய்யும் மனிதனுக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியினால். மனிதனோடு என்றென்றைக்கும் உறவாட விரும்பிய அன்புள்ள கடவுள் மனிதனை நித்திய நரகாக்கினையிலிருந்து தப்புவிக்கும்படி தீர்மானித்தார். ஆகவே எல்லா மனிதர்களுடைய பாவங்களையும் தம்மேல் ஏற்றுக்கொண்டு ‘இரத்தஞ்சிந்துதலில்லாமல் மன்னிப்பு (பாவநிவிர்த்தி) உண்டாகாது” (எபி. 9:22; லேவி. 17:11) என்ற கடவுளுடைய சட்டத்தின்படி எல்லோருக்கும் பதிலாகத் தம்மையே இரத்தம் சிந்திய பலியாக ஒப்புக்கொடுக்கும்படி மனித அவதாரமெடுத்து அவர் இவ்வுலகத்திற்கு வந்தார்.
மனித ரூபத்தில் இவ்வுலகத்தில் வந்த கடவுள் முப்பத்து மூன்றரை ஆண்டுகள் மனிதர் மத்தியில் சஞ்சரித்தார். எல்லா ஜனங்களுக்கும் நன்மை செய்கிறவராகவும் எல்லா வியாதியஸ்தரையும் சுகமாக்குகிறவராகவும் தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்துப் பிரசங்கம் செய்துகொண்டு துறவியாக இப்பொழுதுள்ள இஸ்ரேல் நாட்டில் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அவர் சுற்றி நடந்தார். அவர்தாமே கர்த்தராகிய இயேசுகிறிஸ்து. அவருடைய பரிசுத்தமான அறிவுரைகளைக் கேட்க மனமற்ற அவருடைய சொந்த ஜனங்கள் அவரைச் சிலுவை மரத்தில் அறைந்தனர். நம்முடைய எல்லாப் பாவங்களுக்காகவும் நம்மேல் வரவேண்டிய எல்லாத் தண்டனைகளையும் பாவமறியாத அவர்தாமே நமக்காகச் சுமந்து சிலுவையில் தம்முடைய இரத்தத்தைச் சிந்தி உயிர் நீத்தார். மூன்றாம் நாளில் அவர் ஏற்கனவே சொல்லியிருந்தபடி மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்தார் பின்பு. நாற்பது நாட்கள் வரை தமது சீஷர்களுக்கு அவர் தம்மை உயிரோடிருக்கிறவராகக் காண்பித்து விட்டு. அவர்கள் கண்களுக்கு முன்பாகப் பரலோகத்திற்குச் சென்றார். ஆனால் இன்றும் அவர் அரூபியாய்த் தம் பக்தர்களுடனிருந்து கிரியை நடப்பித்து வருகிறார். பரலோகத்தில் இருந்தவரும் பரலோகத்திலிருந்து இறங்கினவரும் பரலோகத்திற்கு ஏறினவருமாகிய இவரே உண்மையான அவதாரம். ஆகவே ‘அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு (பாவமன்னிப்பு) இல்லை” என்று வேதாகமம் தெளிவாகச் சொல்லுகிறது (அப். 4:12). மேலும் ஆண்டவராகிய ‘இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மைச் சுத்திகரிக்கும்” என்றுங்கூட வேதவாக்கியம் கூறுகிறது (1 யோவான் 1:7). நம்முடைய பாவங்களுக்காகச் சிந்தப்பட்ட கர்த்தராகிய இயேசுவின் இரத்தத்தை விசுவாசித்து அதன் மூலமாக மனஸ்தாபத்தோடு மன்னிப்பு கேட்கும்போது பாவ மன்னிப்பின் நிச்சயத்தையும் இரட்சிப்பின் சந்தோஷத்தையும் அவர் நமக்குத் தருகிறார். அதன்பின் முழுக்கு ஞானஸ்நான சத்தியத்திற்குக் கீழ்ப்படியும்போது நமக்குள் இயற்கையாய் அமைந்திருக்கும் பாவ சுபாவத்திற்கு நாம் மரிக்கிறோம். பின்பு தேவ சமூகத்தில் காத்திருந்து பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை நாம் பெற்றுக்கொள்ளும்போது பாவமில்லாமல் பரிசுத்தமாய் ஜீவிக்கும் சக்தியையும் அவர் நமக்குக் கொடுக்கிறார். பரிசுத்தமாக ஜீவிப்பவர்கள் இந்த உலகத்தில் சமாதானத்தையும் சந்தோஷத்தையும் பெற்றுக்கொள்வது மட்டுமின்றி மறு உலகத்திலும் மோட்சானந்த பாக்கியத்தைப் பெறுவர்.
நண்பரே இந்த மேலான ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ள நாம் பணம் செலவழிக்கவோ புனிதயாத்திரை செய்யவோ நம் பெயரை மாற்றவோ தேவையில்லை. உமது வீட்டறையிலேயே ஒரே கடவுளாகிய இயேசுகிறிஸ்துவை உமது மனக்கண்களால் தியானித்து உண்மையான மனதுடனும் மெய் மனஸ்தாபத்துடனும் உமது பாவங்களை அவரிடம் சொல்லி மன்னிப்பு கேட்பீரேயாகில் உமது உள்ளத்தில் இந்தப் பேரின்ப சந்தோஷத்தை நீரும் அனுபவிக்கலாம்.
மற்றும் எந்தவித வியாதி உமக்கிருந்தாலும் ஆண்டவராகிய இயேசுவிடம் உம் பாவங்களை அறிக்கை செய்து வேண்டிக்கொள்ளும்போது அவர் அவ்வியாதியிலிருந்து எவ்வித மருத்துவமுமின்றி பூரண சுகம் கொடுக்கிறார். அன்றியும் எவ்விதமான பில்லி சூனியக் கட்டுகளினால் கட்டப்பட்டிருந்தாலும் ஆண்டவராகிய இயேசு உம்மை விடுதலையாக்குவார். மேலும் சிகரெட் மது போதை மருந்துகள் போன்றவற்றிற்கு அடிமைப்பட்டிருப்போருக்கும் அத்தீய பழக்கங்களிலிருந்து கர்த்தராகிய இயேசுகிறிஸ்து உடனடியான விடுதலையளிக்கிறார். இந்த விடுதலையை எங்களைப் போன்ற அநேகர் இந்த உலகில் இன்று அனுபவிக்கின்றனர். இந்த ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு உண்மையான பாவமன்னிப்பையும் முழுக்கு ஞானஸ்நானத்தையும் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தையும் பெற்று நீரும் இவ்வுலகத்தில் சமாதானமும் சந்தோஷமும் அடைவதுமல்லாமல் மறுமையில் என்றென்றும் ஒளிமயமான மேட்சத்தில் மிக உன்னதமான நிலையையும் அடைவீராக!
ஆண்டவராகிய இயேசுவின் மூலம் ஒளிமயமான எதிர் காலத்தைப் பெற்றனுபவிக்க விரும்பினால் பின்வரும் ஜெபத்தைச் சொல்லுங்கள்.
‘கர்த்தராகிய இயேசுவே நீர் என் பாவங்களுக்காகக் கல்வாரிச் சிலுவையில் மரித்தீர் என்பதை நான் விசுவாசிக்கிறேன். என் பாவங்களையெல்லாம் மன்னித்து என் வாழ்வில் குடிகொண்டிருக்கும் இருளை அகற்றி இவ்வுலகிலும் மறுமையிலும் எனக்கு ஒளிமயமான எதிர்காலத்தைத் தாரும் ஆமென்”.

 

You can find equivalent English tract @

உங்களுக்கு ஒளிமயமான எதிர்காலம்